நடிகர் சிவகுமார் அவர்கள் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்ட இந்தத் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ‘உயிரிலே கலந்தது’ படப்பிடிப்பின் போது, சூர்யா யாரிடமும் அதிகம் பேசாமல் ஒதுங்கியே இருப்பாராம். அப்போது ஜோதிகாவிடம் போய் பேசுமாறு சூர்யாவைத் தள்ளிவிட்டு, இருவருக்கும் இடையே உரையாடலைத் தொடங்கி வைத்தவர் நடிகை ராதிகா சரத்குமார் தான். ராதிகாவின் இந்த பங்களிப்பு குறித்து சிவகுமார் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.
தன் மகனின் காதலை ஏன் ஏற்றுக்கொண்டார் என்பதற்கு அவர் சொன்ன காரணம் மிகச் சிறப்பு. “திரைப்படங்களில் நான் 150 கதாநாயகிகளை காதலிப்பது போல நடித்துள்ளேன். அப்படி இருக்கும்போது, என் மகனின் உண்மையான காதலுக்கு நான் எப்படி ‘நோ’ சொல்ல முடியும்?” என்று மிக எதார்த்தமாகப் பதிலளித்துள்ளார்.
