பிரபல நடிகையான ரோஜா ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரியாக இருக்கிறார். இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி பண்டாரு சத்திய நாராயணமூர்த்தி அளித்த பேட்டியில் நடிகை ரோஜா ஆபாச படத்தில் நடித்த கூறி அவதூறாக பேசியுள்ளார். இதுகுறித்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரசார் அளித்த புகாரின் பேரில் பண்டாரு சத்திய நாராயணமூர்த்தி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் அமைச்சரின் கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய ரோஜா, ஒரு முன்னாள் மந்திரி என்னை பற்றி இவ்வளவு மோசமாக பேசியுள்ளார். அவரது வீட்டிலும் மனைவி, மகள், மருமகள்கள் இருக்கின்றனர். அதனை நினைவில் வைத்துக் கொண்டு அவர் பேச வேண்டும். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தால் இப்படி எல்லாம் பேசுவீர்களா என கேள்வி எழுப்பி கதறி அழுதார்.

இந்நிலையில் ரோஜா மீதான விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகை ராதிகா தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு தோழியாக, நடிகையாக, அரசியல் தலைவராக ரோஜாவின் தைரியம் எனக்கு தெரியும். கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக ரோஜாவுக்கு எதிராக தரம் தாழ்ந்த அரசியல் கருத்துகள் பகிரப்படுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. மத்திய அரசு அண்மையில் தான் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது.

கல்வியில் மட்டுமில்லாமல் அரசியலிலும் பெண்கள் ஒரு பங்காக இருக்கின்றனர். சமூகத்தில் ஒற்றுமையில் பெண்களும் தூணாக இருக்கின்றனர் இந்தியாவில் பெண்களை பாரதமாதாவாக பார்க்கும் நிலையில் இது போன்ற அவதூறான விமர்சனங்களை பரப்புவது அசிங்கமாக உள்ளது என கூறினார். மேலும் ஒரு மந்திரியை ஆபாச படத்தில் நடித்தவர் என கூறுவதற்கும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சிப்பதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.

ஒரு மனிதராக, ஒரு குடும்பத்தின் தலைவனாக, அரசியல்வாதியாக தனது தவறுக்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு பெண்களுக்கு எதிரான இது போன்ற பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் கடுமையான கண்டனம் தெரிவிக்க வேண்டும் என ராதிகா வீடியோவில் கேட்டுக்கொண்டார்.
View this post on Instagram
