MGR-ஐ எம்.ஆர் ராதா துப்பாக்கியால் சுட்டதற்கு இதுதான் காரணம்… உண்மையை புட்டுப்புட்டு வைத்த உடைத்த பிரபலம்..!

By Soundarya on கார்த்திகை 26, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்தவர் தான் எம்ஜிஆர். ஒரு நாடக நடிகராக இருந்த சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடித்து பிறகு பெரிய நாயகனாக உயர்ந்து அரசியலிலும் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை அமைத்த எம்ஜிஆருக்கு இன்றும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. எம்ஜிஆரின் ஒவ்வொரு படங்களிலும் மக்களை கவரும் வகையில் ஒவ்வொரு கருத்து இடம் பெற்றிருக்கும். 1936 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான எம்ஜிஆர் தொடர்ந்து பத்து வருட இடைவேளைக்குப் பிறகு நாயகனாக உருவெடுத்தார்.

#image_title

பின்னர் 1956 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மதுரை வீரன். இந்நிலையில் சமீபத்தில் ராதாரவி அளித்துள்ள ஒரு பேட்டியில், எம்ஜிஆர் சரோஜாதேவி நடிப்பில் வெளியான பெற்றால் தான் பிள்ளையா படத்தில் எம்ஆர் ராதாவின் நண்பர் வாசு தயாரித்திருந்தார். அந்த படத்தின் தயாரிப்பின் போது அவருக்கு பணக்கஷ்டம் ஏற்பட்டதால் அப்போதே எம்.ஆர் ராதாவிற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவியதாக கூறியுள்ளார்.

   
   

 

மேலும் படத்தின் ரிலீசுக்கு பிறகு வாசு விடம் எம்ஆர் ராதா பணம் கேட்டதாகவும் படத்தின் ரிலீசுக்கு முன்பு கூடுதலாக சில காட்சிகளை எம்ஜிஆர் சேர்க்க சொன்னதால் கூடுதல் செலவானதாகவும் வாசு எம்.ஆர் ராதாவிடம் சொல்லி இருக்கிறார். இது குறித்து எம்ஜிஆரிடம் பேசுவதற்காக ராமாபுரம் தோட்டத்திற்கு சென்ற எம்.ஆர் ராதாவுக்கும் எம்ஜிஆர்வுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

#image_title

அப்போது எம்ஆர் ராதா தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் எம்ஜிஆரை சுட்டதாகவும், இதில் காதை உரசி கொண்டு சென்ற துப்பாக்கி குண்டு எம்ஜிஆரின் தொண்டஇ பாய்ந்திருக்கிறது. பிறகு துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு எம் ஆர் ராதா தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். பின்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இரண்டு பேரும் உயிர் பிழைத்ததாக ராத ரவி குறிப்பிட்டுள்ளார்.