கமல் சொன்னது பொய்யா..? பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வரும் பெண்களுக்கு இப்படி ஒரு அவலமா..? உள்ளதை ஓப்பனாக சொன்ன ரசித்தா.

By Sumathi

Updated on:

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி 3ம் பாகத்தில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தனர் ரக்சிதா மகாலட்சுமி. பிரிவோம் சந்திப்போம் சீரியலில் நடித்த போது, உடன் நடித்த தினேஷ் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட பிரிந்துவிட்டனர்.

மீண்டும் மனைவியுடன் சேர்ந்த வாழ தினேஷ் விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், ரக்சிதா மகாலட்சுமி அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார். டிவி சீரியல் மட்டுமின்றி சில சீரியல்களிலும் நடித்துள்ள ரக்சிதா மகாலட்சுமி, விரைவில் போலீஸ் அதிகாரியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அந்த புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலானது.

   

Rachitha Mahalakshmi

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நடந்த விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், ரக்சிதா மகாலட்சுமியின் கணவர் தினேஷ் பங்கேற்றார். அதற்கு முந்தைய ஆண்டு 2022ல் நடந்த பிக்பாஸ் சீசன் 6ல், ரக்சிதா மகாலட்சுமி பங்கேற்றார். ஆனால் இருவரும் டைட்டில் வின்னர், ரன்னர் போன்ற முக்கிய இடங்களை பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் ரக்சிதா மகாலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்பவர்கள், அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்வார்கள். சினிமாவில் பெரிய இடத்தை பிடிப்பார்கள் என, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் அடிக்கடி கூறுகிறார். அப்படி யாருமே சினிமாவில் ஜெயிப்பதில்லை. அப்படி என்றால் கமல் சொல்வது பொய்யா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

Rachitha Mahalakshmi

அதற்கு ரக்சிதா மகாலட்சுமி கூறியதாவது, திறமை இருந்தால் சினிமா வாய்ப்புகள் தேடி வரும். திறமை இல்லை என்றால் யாராக இருந்தாலும் வாய்ப்பு கிடைக்காது என்பதுதான் உண்மை. பிக்பாஸ் வீடு என்பது ஒரு பிளாட்பாரம். அதை பல லட்சக்கணக்கான மக்கள் பார்க்கின்றனர். நடனம், பாட்டு, வசனம் என அங்கு திறமையை காட்டும்போது ஒரு இயக்குநர் அதை பார்த்தால், இவரிடம் திறமை உள்ளதே, இவருக்கு அந்த வாய்ப்பை தரலாமே என முன்வரலாம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர் என்பதற்காக யாரும் வாய்ப்பு தர மாட்டார்கள்.

Rachitha Mahalakshmi

எனக்கும் கூட அப்படித்தான். நானும் ஏற்கனவே சரவணன் மீனாட்சி உட்பட பல சீரியல்களில் நடித்திருக்கிறேன். கமல் சொன்னது, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு திறமை இருப்பவர்கள் அவர்களது வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு போகலாம் என்றுதான். அது திறமை, அது அவர்களது கையில்தான் இருக்கிறது. வாய்ப்புகளை உருவாக்கி முன்னேற போகிறீர்களா, அப்படியே பழையபடி இருக்க போகிறீர்களா என்பதுதான் கமல் அறிவுறுத்திய விஷயம். அதனால், திறமை இருந்தால் நிச்சயமாக ஜெயிக்க முடியும், என்று கூறியிருக்கிறார் நடிகை ரக்சிதா மகாலட்சுமி.

author avatar
Sumathi