ராயன் திரைப்படம் மூன்று நாளில் மட்டும் மொத்தம் 100 கோடி வசூலை நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் தொடர்ந்து அசத்தி வருகின்றார். பவர் பாண்டி திரைப்படத்திற்கு பிறகு இவர் இயக்கிய திரைப்படம் ராயன். இந்த திரைப்படம் நடிகர் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமாகும் இந்தத் திரைப்படத்தை எடுப்பதற்கு ஒரு ஏரியாவையே செட்டு போட்டு படம் ஆக்கி இருக்கிறார்கள். இந்த செட் அமைப்புகளுக்கு மட்டும் 30 கோடி செலவானதாக கூறப்படுகின்றது.
நடிகர் தனுஷ் இந்த திரைப்படத்தில் அண்ணனாக நடிக்க துஷாரா விஜயன் தங்கையாக நடித்திருக்கின்றார். மேலும் காளிதாஸ் ஜெயராம், சந்திப் கிஷன் தம்பிகளாக நடித்திருக்கிறார்கள். மேலும் எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றது. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த திரைப்படத்திற்கு தனுசுக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி திரையரங்களில் வெளியான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. முதல் இரண்டு தினங்களில் 50 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தார். இந்த திரைப்படம் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அனைத்து திரையரங்குகளிலும் இந்த திரைப்படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடி இருந்தது.
மூன்று நாள் முடிவில் ராயன் திரைப்படம் உலக அளவில் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 40 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. தெலுங்கில் 7.5 கோடியும் மற்ற பகுதிகளில் 10 கோடியும் வசூல் செய்திருக்கின்றது. வெளிநாடுகளில் மட்டும் இந்த திரைப்படம் 20 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. விரைவில் இந்த திரைப்படம் 100 கோடியே நெருங்கும் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.