BREAKING: சற்றுமுன் அதிமுகவிலிருந்து விலகினார் முக்கிய புள்ளி… அடுத்த அதிர்ச்சியில் எடப்பாடி..!!

By Soundarya on ஆனி 17, 2026

Spread the love

பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநரும், அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமான தனது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் தீவிரமாகப் பணியாற்றி வந்ததுடன், கட்சியின் மாநிலக் கலைப்பிரிவுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். திரையுலகில் ‘சின்ன கவுண்டர்’, ‘எஜமான்’ போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ள இவர், சமீபகாலமாக அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள் காரணமாக இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் அனுப்பியுள்ள தனது ராஜினாமா கடிதத்தில், “கட்சியின் தற்போதைய நிலை தனக்கு ஆழ்ந்த வேதனையையும் கவலையையும் அளிப்பதாக” குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதைய மனநிலையில் கட்சியில் தொடர்ந்து நீடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்றும், இதனால் கணத்த இதயத்துடன் தனது பதவிகளை ராஜினாமா செய்வதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து விலகி வரும் வேளையில், ஆர்.வி. உதயகுமாரின் இந்த விலகல் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.