Categories: சினிமா

“விஜயகாந்த் யாருக்கும் 10 பைசா தரமாட்டான்”.. விஜயகாந்தை ஒருமையில் பேசிய நடிகர் சுந்தர்ராஜன்.. திடீரென வைரலாகும் பழைய வீடியோ

Spread the love

கோவையை சேர்ந்தவர் ஆர். சுந்தர்ராஜன். டைரக்டர் மற்றும் நடிகராக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல், குங்குமச்சிமிழ், ராஜாதி ராஜா போன்ற படங்களை இயக்கிய டைரக்டர். அதுமட்டுமின்றி பல படங்களில் ஆர் சுந்தர்ராஜன் நடித்திருக்கிறார். அமைதிப்படை, சூர்யா வம்சம், தசாவதாரம், நட்புக்காக, ஜானகிராமன், லிங்கா என பல படங்களில் அப்பா, அண்ணன், தாத்தா கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

அதிமுக விசுவாசியான அவர் கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தமிழகம் முழுவதும் பல தொகுதிகளுக்குச் சென்று அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து அவர் பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. ஆனால் விஜயகாந்த் நடித்த அம்மன் கோவில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள் படங்களை இயக்கிய இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த பழைய வீடியோவில் ஆர் சுந்தர்ராஜன் பேசியதாவது, விஜயகாந்துக்கு கேப்டன் என்ற பெயரை அவரது மனைவியோ, அப்பாவோ, அக்காவோ வைக்கவில்லை. கேப்டன் என்ற பெயரை மக்களும் தரவில்லை. லியாகத் அலிகான் என்ற சினிமா கதை வசனம் எழுதிய எழுத்தாளர் கேப்டன் பிரபாகரன் படத்துக்கு கதை எழுதும்போது வைத்த பெயர். அந்த லியாகத் அலிகான் இப்போது அதிமுகவில்தான் இருக்கிறார்.

ஆயிரம் பேரை காப்பாத்தீட்டு சாகறவன் கேப்டன். ஆயிரம் பேரை கொன்னுட்டு உயிரோடு இருக்கிறவன் கேப்டனா, பத்து பைசா யாருக்குமே நல்லது செய்யாதவன் விஜயகாந்த். ஒரு ஆளுக்கு பத்து பைசா தரமாட்டான். என்னை விட நாலுவயசு சின்னவன். என் படங்களில் நடித்தவன். இவனெல்லாம் தமிழ்நாட்டை ஆள ஆசைப்படுகிறான் என்று விஜயகாந்தை ஆர் சுந்தர்ராஜன் ஒருமையில் பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது.

admin

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

5 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

5 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

5 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

5 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

5 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

5 மணத்தியாலங்கள் ago