“அவன் பொம்பள பொறுக்கிம்மா”… காவல் நிலையத்தில் பெற்ற மகளின் காலில் விழுந்து கதறிய தந்தை.. நெஞ்சை உலுக்கும் பரபரப்பு வீடியோ…!

By Nanthini on ஆடி 7, 2026

Spread the love

பெற்றோரின் வளர்ப்பையும் பாசத்தையும் உதறித்தள்ளிவிட்டு, காதலனுடன் சென்ற கல்லூரி மாணவியின் செயல் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கட்டேரி பகுதியைச் சேர்ந்த காளி – கவிதா தம்பதியின் மகள் திவ்யதர்ஷினி (19). கல்லூரிக்குச் செல்லும்போது ஆட்டோ ஓட்டுநரான பெருமாள் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலுக்கு திவ்யதர்ஷினியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், காதலனின் தவறான பின்னணியே இந்த எதிர்ப்புக்கு முதன்மைக் காரணமாக இருந்துள்ளது.

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியேறிய திவ்யதர்ஷினி, ஏலகிரி மலையில் உள்ள முருகன் கோவிலில் பெருமாளைத் திருமணம் செய்து கொண்டார். மகளைக் காணவில்லை என பெற்றோர் தேடி வந்த நிலையில், இந்த இளம் ஜோடி பாதுகாப்பு வேண்டி திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தது. போலீசார் தகவலளித்ததன் பேரில் காவல் நிலையம் விரைந்து வந்த பெற்றோர், மகளைத் தங்களோடு வருமாறு கதறி அழுது அழைத்தனர். ஒருகட்டத்தில், பெற்ற தந்தை தனது மகளின் காலில் விழுந்து, “அவன் பொம்பள பொறுக்கிம்மா… நம்மளோடு வந்துவிடு” என்று பித்து பிடித்தவரைப் போல் கெஞ்சிய காட்சி, அங்கிருந்தோரை கலங்கச் செய்தது. ஆனால், 19 வயது வரை ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்த்த பெற்றோரின் கண்ணீரையும் கெஞ்சலையும் பொருட்படுத்தாத அந்தப் பெண், காதலனுடன்தான் செல்வேன் என்பதில் பிடிவாதமாக இருந்து அவருடனேயே சென்றுவிட்டார்.

   

இதனைத் தொடர்ந்து திவ்யதர்ஷினியின் தந்தை காளி செய்தியாளர்களிடம் கண்ணீருடன் பேசுகையில், அந்த இளைஞனுக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதோடு, மது மற்றும் கஞ்சா போன்ற போதைப் பழக்கங்களும் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். மேலும், அவன் பெண்களை ஏமாற்றி நகைகளைப் பறிப்பது, சொத்துக்களை எழுதி வாங்குவது போன்ற மோசடி வேலைகளில் ஈடுபடுபவன் என்றும், ஏற்கனவே தன் மகளிடமிருந்தும் பணத்தைப் பறித்துத் தின்றுள்ளான் என்றும் ஆதங்கத்துடன் தெரிவித்தார். பெற்றோரின் இந்த நிலையைப் பார்த்த சமூக வலைத்தளவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களைத் தீவிரமாகப் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, பெற்றோரை எதிர்க்கும் பிள்ளைகளுக்குப் பரம்பரைச் சொத்துக்களிலோ அல்லது பெற்றோரின் பணத்திலோ எந்த உரிமையும் இல்லை என்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்துகின்றனர்.

   

அதே நேரத்தில், காவல்துறையின் செயல்பாடுகள் குறித்தும் நெட்டிசன்கள் சில காரசாரமான விவாதங்களை எழுப்பியுள்ளனர். காதல் ஜோடிகளுக்குப் பாதுகாப்பு வழங்கி திருமணம் செய்து வைக்கும் முன்பு, அந்த மாப்பிள்ளையின் பின்னணி மற்றும் குணாதிசயங்கள் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டியது காவல்துறையின் கடமை என்று ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார். பெற்றோரைப் போல மாப்பிள்ளையைப் பற்றி தீர விசாரிக்காமல் அவசரப்பட்டு சேர்த்து வைப்பதும், அதன் பின் நடக்கும் குடும்பப் பஞ்சாயத்துகளுக்குப் பொறுப்பேற்காமல் இருப்பதும் முறையல்ல என்ற கருத்தும் பரவலாக எழுந்துள்ளது. பாசம், காதல், சட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான இந்த விவாதம் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

 

https://www.instagram.com/reel/DaeZuMEvzgg