“உடல் முழுவதும் கடித்து.. கூட்டு பாலியல் வன்கொடுமை”…. 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. நாடே அதிரும் பிரேதப் பரிசோதனை அறிக்கை… சிக்கிய சிசிடிவி ஆதாரம்….!

Spread the love

மேற்கு வங்க மாநிலம் பரூய்பூர் பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை மாலை கடைக்குச் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பதற்றமடைந்த பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் இருந்து சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிறுமியின் உடலைக் கைப்பற்றி நடத்தப்பட்ட முதற்கட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் பல கொடூரமான தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அச்சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதும், அவரது தலையில் பலத்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், உடலின் பல்வேறு இடங்களில் கடித்த காயங்களும் கீறல்களும் கண்டறியப்பட்டுள்ளன. தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் ரத்தப்போக்கு ஏற்பட்டிருந்த நிலையிலும், சிறுமி உயிருடன் இருக்கும்போதே குளத்தில் வீசப்பட்டதால் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொடூரச் செயலால் ஆத்திரமடைந்த பரூய்பூர் பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் நீதிகேட்டு வீதிகளில் இறங்கி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். டயர்களை எரித்து சாலை மறியல் மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியே போர்க்களமாக மாறியது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற போலீசாரின் வாகனங்களும் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வன்முறை மோதலின் போது எதிர்பாராதவிதமாக ஒரு சிறுவன் உயிரிழந்ததால் நிலைமை மேலும் மோசமடைந்தது. இதனால் அப்பகுதியில் பதற்றத்தைத் தணிக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் கடுமையான அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையில், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இந்த வழக்கின் முதன்மை குற்றவாளி உட்பட மூன்று பேரை உடனடியாகக் கைது செய்துள்ளனர். தடயவியல் ஆதாரங்கள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களையும் கண்டறிய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

2 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

2 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

2 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

2 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

2 மணத்தியாலங்கள் ago