நாக்கைத் தொங்கப் போட்டு… அதிமுகவினரைக் கூவிக் கூவிக் அழைக்கிறீங்களே… ஆர்.பி. உதயகுமார் காட்டம்.!!

By Soundarya on வைகாசி 29, 2026

Spread the love

“90 சதவீத அதிமுகவினர் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைவார்கள்” என்று தவெக மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா அண்மையில் பேசிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய முக்கிய நிர்வாகியுமான ஆர்.பி. உதயகுமார் மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுத்துள்ளார். தவெக தலைவர் விஜய் மீதான மக்கள் செல்வாக்கு மற்றும் கட்சியின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பி, இந்த விமர்சனத்திற்கு அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஆர்.பி. உதயகுமார் தனது பதிலடியில், “நாக்கைத் தொங்கப் போட்டு, அதிமுகவினரைக் கூவிக் கூவிக் அழைக்கிறீர்களே! விஜய் மீதான மக்கள் செல்வாக்கு கேள்விக்குறி ஆகிவிட்டதா? உங்கள் கட்சி மீதும், தலைவர் மீதும் நம்பிக்கை இழந்து விட்டீர்களா?” என்று தவெக நிர்வாகிகளை நோக்கி அடுக்கடுக்கான காரசாரமான கேள்விகளைக் கேட்டு விமர்சித்துள்ளார். தவெக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே எழுந்துள்ள இந்த அரசியல் மோதல் மற்றும் வார்த்தைப் போர் தற்பொழுது சமூக ஊடகங்களிலும் ஊடகங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.