தவெகவில் இருந்து விலகினர்.. திடீர் திருப்பம்…. காலையிலேயே விஜய்க்கு ஷாக் கொடுத்த முக்கிய புள்ளி….!

By Nanthini on ஆனி 22, 2026

Spread the love

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, அண்மையில் அதிமுகவில் இருந்து விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அணியினர் மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்பியுள்ளனர்.

தவெகவின் செயல்பாடுகளில் தங்களுக்கு உடன்பாடும் திருப்தியும் இல்லாத காரணத்தால், வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, தியாகராஜன், சசிகுமார், சுரேஷ்குமார் மற்றும் சுபாஷ் ஆகியோர் தங்களது முடிவை மாற்றிக்கொண்டுள்ளனர். இன்று சென்னை பசுமைவழிச் சாலையிலுள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்த அவர்கள், மீண்டும் தங்களை அதிமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர்; இந்த திடீர் கட்சித் தாவல் மற்றும் மறுவருகை அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.