பள்ளிகளில் நாளை முதல் காலாண்டுத் தேர்வுகள் தொடங்கவுள்ளது. இந்தநிலையில், அரசு பள்ளிகளில் ‘திறன்’ திட்டத்தில் பயிற்சி பெறும் (கற்றல் குறைபாடுள்ள) மாணவர்களுக்கு தனி வினாத்தாள்களை தயாரித்து வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வினாத்தாள்களின் மொத்த மார்க், வழக்கமான காலாண்டு தேர்வு மார்க் அளவிலேயே இருக்கும். exam.tnschools.gov.in தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
