பீகார் மாநிலம் மாவட்டத்தில் மருத்துவ உலகையே அதிச்சியடையச் செய்யும் மனிதாபிமானமற்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த நபர் ஒருவருக்கு, அங்குள்ள போலி மருத்துவர் ஒருவர் தையல் போடுவதற்குப் பதிலாக, சாதாரண காகிதங்களுக்குப் பயன்படுத்தும் ஸ்டேப்ளர் பின்களை கொண்டு காயத்தை இணைத்துள்ளார்.
மேலும் காயத்தின் தீவிரத்தை உணராமல், முறையான மருத்துவ உபகரணங்கள் இன்றிச் செய்யப்பட்ட இந்தச் செயல் அந்த நோயாளியின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட நபர் தற்போது மேல் சிகிச்சைக்காக முறையான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பீகாரின் கிராமப்புறங்களில் போலி மருத்துவர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதையும், அடிப்படை மருத்துவ வசதிகள் இன்றி மக்கள் படும் அவதிகளையும் இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர், அந்தப் போலி மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.
