சமூக வலைதளங்களில் அவ்வப்போது திகைப்பூட்டும் வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், நபர் ஒருவர் பிரம்மாண்டமான ராட்சத மலைப்பாம்பு ஒன்றை எவ்வித அச்சமுமின்றி தனது தோளில் சுமந்து செல்கிறார். பார்ப்பதற்கே உடல் சிலிர்க்க வைக்கும் அந்த மலைப்பாம்பு, அந்த நபரை விடப் பல மடங்கு நீளமாகவும், பருமனாகவும் உள்ளது. பொதுவாகப் பாம்புகளைக் கண்டாலே அலறியடித்து ஓடும் மக்கள் மத்தியில், இவ்வளவு பெரிய உயிரினத்தை ஒரு பொம்மையைப் போல அவர் கையாள்வது இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
அந்த மலைப்பாம்பு எப்போது வேண்டுமானாலும் அவரைத் தாக்கக்கூடும் என்ற ஆபத்து இருந்தபோதிலும், அவர் மிகவும் நிதானமாக அதனைச் சுமந்து செல்கிறார். இந்த வீடியோ இதுவரை பல லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “இவருக்கு உயிர்பயம் இல்லையா?” என்றும், “இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது உயிருக்கே உலையாக முடியும்” என்றும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அதே சமயம், அந்தப் பாம்பின் பிரம்மாண்ட தோற்றமும், அதன் உடல் நிறமும் பலரை வியப்படையச் செய்துள்ளது.
