இந்தியா – ரஷ்யா இடையேயான வரலாற்று ரீதியான நட்புறவை அமெரிக்காவால் சிதைக்க முடியாது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். புனித பீட்டர்ஸ்பர்க்கில் சர்வதேச ஊடகத் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் பேசிய அவர், அமெரிக்காவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், இந்தியாவின் மீது அழுத்தம் கொடுக்கும் அதன் முயற்சிகளை மறைமுகமாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். உலக அரங்கில் வளர்ந்து வரும் இந்தியாவின் பலத்தையும், அதன் இறையாண்மையையும் புதினின் இந்த சமீபத்திய கருத்துகள் மீண்டும் உலகிற்குப் பறைசாற்றியுள்ளன.
சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகள் அமெரிக்கா அல்லது ரஷ்யா ஆகிய இரு துருவங்களில் ஏதேனும் ஒரு பக்கமே சாய்ந்திருக்கும் நிலையில், இந்தியா இரு தரப்புடனும் சமமான நல்லுறவைப் பேணி வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில் இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு பல மடங்கு மேம்பட்டிருந்தாலும், ரஷ்யாவுடன் நமக்கு பல தலைமுறைகளாக இருக்கும் ஆழமான நட்புறவு எள்ளளவும் குறையவில்லை. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கும், ராணுவ ரீதியான உறவுகளைப் பராமரிப்பதற்கும் அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தாலும், அதைப்பற்றி தாங்கள் சவலைப்படுவதில்லை என்று புதின் உறுதியாகக் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அதிபர் புதின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைப் பண்பை வெகுவாகப் பாராட்டினார். “பிரதமர் மோடியை அழுத்தத்திற்கு உள்ளாக்குவது என்பது மிகவும் பயனற்ற காரியம். உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டை வழிநடத்தும் மோடி போன்ற ஒரு தலைவருக்கு அழுத்தம் தருவது, சர்வதேச உறவுகளுக்கே நல்லதல்ல” என்று அவர் எச்சரித்துள்ளார். இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றும், தனது நாட்டின் சுயநலன் மற்றும் தேசியப் பாதுகாப்பிற்கு ஏற்பச் சுதந்திரமாக முடிவெடுக்கும் தகுதி இந்தியத் தலைமைக்கு உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவுடன் இந்தியா தனது உறவைப் பலப்படுத்திக் கொண்டாலும், அதை ஒருபோதும் ரஷ்யா தனக்கான அச்சுறுத்தலாகப் பார்க்கவில்லை என்று புதின் தெளிவுபடுத்தியுள்ளார். இந்தியா தங்களுக்கு எப்போதும் ஒரு நம்பிக்கையான, மிக முக்கிய கூட்டாளியாகவே (Partner) இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், வரும் காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் 100 பில்லியன் டாலர் என்ற பிரம்மாண்ட இலக்கை எட்டும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார். புதினின் இந்த உரை, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
தலைநகர் டெல்லியின் விகாஸ்புரி பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையில், பெண் வாடிக்கையாளர்களின் வசதிக்காகத் தொடங்கப்பட்டுள்ள தனி கவுண்டர் சமூக…
தமிழகத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பேசப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்து ஒன்று அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விழாவில்…
மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட அகமதுபூர் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், அப்பகுதி நகராட்சி அலுவலகத்தில்…
மதுரை மாநகராட்சியில் அதிமுகவைச் சேர்ந்த 15 கவுன்சிலர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில்…
கோவில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் மற்றும் மங்களப் பொருட்கள் வெறும் ஜடப்பொருட்கள் அல்ல; அவை மனித மனங்களுக்கு அமைதியையும், நம்பிக்கையையும், நேர்மறை…
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி, தமிழக அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. புதிதாகக்…