செய்தியாளர்களை சந்தித்து பேசிய புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை பார்த்து 75, 40 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட கட்சிகள் எல்லாம் பயப்படுகின்றன. அதனால் தான் அவரை கடுமையாக விமர்சிக்கிறார்கள். தமிழக மக்கள் நலனுக்காக அமையும் நல்ல கூட்டணியில் புதிய தமிழகம் பங்கேற்கும்.
கடந்த தேர்தலுடன் ஒரு கட்சி ஆட்சி முடிந்துவிட்டது. இனிமேல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் ஏற்படும். எந்த கூட்டணியில் புதிய தமிழகம் இருந்தாலும் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்” என்று கூறியுள்ளார்.
