தவெகவின் சின்னம் “வெளிவந்த 15 நிமிடங்களுக்குள்” உலகப்புகழ் பெறும்… புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு…!!

By Soundarya on மார்கழி 16, 2025

Spread the love

உள்கட்சி கட்டமைப்பை பலப்படுத்தி வரும் தமிழக வெற்றி கழகம் கட்சியானது தேர்தல் சார்ந்த பணிகளிலும் மும்முரம் காட்டி வருகிறது. இதற்கிடையில், கட்சியின் சின்னமாகக் ‘விசில்’, ‘பேட்’, ‘வெற்றி கோப்பை’ அல்லது ‘மோதிரம்’ போன்ற சின்னங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில், தவெகவின் சின்னம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்த 15 நிமிடங்களுக்குள் அது உலகப்புகழ் பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இதனால் அப்படி என்ன சின்னமாக இருக்கும்? என்று பலரும் யோசித்து வருகிறார்கள்.