Categories: சினிமா

அடக் கடவுளே..! முக்கியமான அந்த நபரே இல்லாம புரொமோஷன் நிகழ்ச்சியா..? புஷ்பா-2 வில் நடக்கும் பஞ்சாயத்து..!

Spread the love

தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் நிற்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் புஷ்பா 2. இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தத் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா தி ரூல் படத்தின் முதல் பார்வை இந்த ஆண்டு வெளியானதில் இருந்தே படம் குறித்து பார்வையாளர்கள் மனதில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

சமீபத்தில் படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் அல்லு அர்ஜுன் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார்.  இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டிக்கெட் விண்டோவில் படம் பெரும் வசூலை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு 300 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்நிலையி புஷ்பா 2 படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியை பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நேற்று முன்தினம்  பிரமாண்டமாக நடைபெற்றது.

பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் மாலை 5 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு மேடையில் பேசினார்கள். அதன்படி அந்த  நிகழ்ச்சி மேடையில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது தயாரிப்பாளர்களிடம் இருந்து பணம்பெறுவதாக இருந்தாலும் அல்லது படத்தின் கிரெடிட்டாக இருந்தாலும், நமக்கு என்ன தேவையோ அதை மட்டும் தான் கேட்டு பெற வேண்டும்.

புஷ்பா படத்தின் தயாரிப்பாளர் ரவிக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கு புரியல. ரவி சார் நான் ஏதோ மேடையில் ஏறி நிறைய நேரம் பேசுறேனு நினைக்காதீங்க. நீங்க என்னவோ கரெக்ட்டான நேரத்துக்கு பாட்டு கொடுக்கல, டைமுக்கு பேக்ரவுண்ட் ஸ்கோர் கொடுக்கல, டைமுக்கு ப்ரோக்ராமுக்கு வரலன்னு சொல்றீங்க. உங்களுக்கு என் மேல் அதிக அன்பு இருக்கு. ஆனா, அன்பை விட அதிகமாக  புகார்கள் என் மீது ஏன் இருக்குன்னு எனக்கு புரியல. நான் வந்து 25 நிமிடங்கள் மேல் ஆகிவிட்டது. ஆனால், சார் கேமரால என்ட்ரி குடுங்க என்று சொல்றீங்க. உண்மைய சொல்லணும்னா எனக்கு ரொம்ப வெட்கமாக இருக்கிறது என்று பேசியிருந்தார்.  ஆனால் இந்த புரொமோஷன் நிகழ்ச்சிக்கு படத்தின் டைரக்டர் வரவில்லையாம்.

#image_title

ஏதோ பிரச்சினையின் காரணமாக அவர் வராததால் முக்கியமான நபரே இல்லாமல் புஷ்பா 2 படத்திற்கு புரொமோஷனா? என்று ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகிறார்கள். மேலும் அல்லு அர்ஜுன் பேசுகையில், படத்தின் கலவை மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் எடிட்டிங் பணிகளில் சுகுமார் மும்முரமாக இருந்ததால் சுகுமார் கலந்து கொள்ளவில்லை. எனது கேரியரை திரும்பிப் பார்க்கும்போது, ​​என் வாழ்க்கையில் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்திய ஒருவரை நான் சுட்டிக்காட்ட வேண்டுமானால், அது சுகுமாராகத்தான் இருக்க வேண்டும். இப்போதும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அவர் இல்லாதது அவரது இருப்பை விட சத்தமாக பேசுகிறது. ஐ மிஸ் யூ சுக்கு. இதில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.

Soundarya

Recent Posts

“யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்”… ஈரானுடன் டீல் போட்ட சீனா… ட்ரம்ப்பின் ட்ரூத் சோஷியல் பதிவால் அதிரும் உலக நாடுகள்…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் நீரிணையை சீனாவுக்காக நிரந்தரமாகத் திறப்பதாக அறிவித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

57 seconds ago

“வாடா மோதிப்பார்க்கலாம்” மயில் vs பாம்பு.. ஜெயிக்கப்போவது யார்..? நடுரோட்டில் நடந்த பயங்கர மோதல்… வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு மயில் மற்றும் ஒரு பாம்புக்கு இடையே நடக்கும் கடுமையானப் போராட்டம்…

2 minutes ago

உஷார்!.. “பிரிட்ஜ் கம்ப்ரஸர் வெடிக்க இதுதான் காரணமா?”.. கோடை காலத்தில் நீங்கள் செய்ய வேண்டிய 3 தற்காப்பு நடவடிக்கைகள்…!!!

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், வீடுகளில் பிரிட்ஜ் பயன்பாடு பன்மடங்கு உயர்ந்துள்ளது. இந்தச் சூழலில், பிரிட்ஜை சுவரோடு ஒட்டி…

3 minutes ago

“வாட்ச் முதல் லேட்டஸ்ட் ஐபோன் வரை!” – ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களை திக்குமுக்காட வைக்கும் ‘மெகா’ பாஸ்… சீன நிறுவனத்தின் தாராள குணத்தால் கடுப்பான இந்திய நெட்டிசன்கள்…!

உலகெங்கும் ஆட்குறைப்பு மற்றும் பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகள் நிலவி வரும் சூழலில், சீனாவைச் சேர்ந்த மீடியாஸ்டார்ம் (Mediastorm) நிறுவனம்…

5 minutes ago

பகீர் வீடியோ..! சாலையில் சிதறிய கோழிகள்… மனிதாபிமானத்தை காற்றில் பறக்கவிட்டு வேட்டையாடிய மக்கள்… வைரல் வீடியோ.!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், சாலையில் கோழிகள் ஏற்றிச் சென்ற வண்டி விபத்துக்குள்ளானதை அல்லது நின்றுகொண்டிருந்ததைச் சாதகமாக்கிக்…

6 minutes ago

“போதும் கீழே இறங்குங்க”… நேரலையில் எடப்பாடியைத் தொட்டு மோடி சொன்னது என்ன?… குமரியில் பரபரப்பு….!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக,…

8 minutes ago