Categories: சினிமா

தேவி ஸ்ரீ பிரசாந்தை தொடர்ந்து புஷ்பா 2 படத்தில் இருந்து தூக்கப்பட்ட முக்கிய பிரபலம்.. கடுப்பான அல்லு அர்ஜுன்..!

Spread the love

தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் நிற்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் புஷ்பா 2. இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தத் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா தி ரூல் படத்தின் முதல் பார்வை இந்த ஆண்டு வெளியானதில் இருந்தே படம் குறித்து பார்வையாளர்கள் மனதில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் அல்லு அர்ஜுன் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார்.

இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டிக்கெட் விண்டோவில் படம் பெரும் வசூலை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் ரிலீசுக்கு முன்பே பல கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் க்கு முந்தைய வியாபாரத்தில் 1085 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.  படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் புஷ்பா 2 படத்திற்கு குபா ப்ராஜெக் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்துள்ளார்.

தற்போது படக்குழுவினர் இந்தியா முழுவதும் பிரமோஷன் வேலைகளில் பிஸியாக ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் கூட சென்னையில் புஷ்பா 2 பிரமோஷன் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிலையில் ஏற்கனவே இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் சாம் சிஎஸ் சேர்க்கப்பட்டார். தற்போது அடுத்ததாக எடிட்டர் ரூபனை இப்படத்திலிருந்து தூக்கி விட்டார்களாம்.

இப்படத்தை எடிட்டிங் கிட்டத்தட்ட 99 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில் ஏதோ ஒரு பிரச்சனையால் இயக்குனர் சுகுமார் எடிட்டர் ரூபனை தூக்கி விட்ட நிலையில் இதில் அல்லு அர்ஜூனுக்கே விருப்பம் இல்லையாம். சுகுமாரிடம் அவர் எவ்வளவோ பேசியும் அவர் ரூபனை தூக்கி விட்டார். தெலுங்கு சென்சார் நாளை நடைபெற உள்ள நிலையில் நவீன் நூலி மட்டுமல்லாமல் சுமார் 10 எடிட்டர்கள் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ரிலீஸ் தேதி நெருங்கும் நேரத்தில் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது சற்று அதிர்ச்சியாக தான் உள்ளது.

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

8 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

9 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

9 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

10 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

10 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

10 மணத்தியாலங்கள் ago