சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருவதால் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற முன்னணி சேனல்கள் அதிக அளவிலான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. முன்பெல்லாம் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த சீரியல்களுக்கு தற்போது டிமாண்ட் அதிகரித்துள்ள காரணத்தால் 7 நாட்களும் ஒளிபரப்பி வருகிறார்கள். ஒரு சீரியல் எந்த அளவு மக்கள் மத்தியில் வரவேற்பு பெறுகிறது என்பதை டிஆர்பி மூலம் தான் கண்டறிய முடியும். அதன்படி இந்த வாரத்திற்கான டாப் 10 சீரியல்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் விஜய் டிவி சீரியல்கள் மளமளவென முன்னுக்கு வந்துள்ளன. கடைசி ஐந்து இடங்களை விஜய் டிவி சீரியல்கள் ஆக்கிரமித்துள்ளது.
அதில் பத்தாவது இடத்தில் ஹா ஹா கல்யாணம் சீரியல் இடம் பெற்றுள்ள நிலையில் அதனை தொடர்ந்து ஒன்பதாவது இடத்தில் சின்ன மருமகள் சீரியல் இடம்பெற்றுள்ளது. ஆஹா கல்யாணம் சீரியல் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் கதைக்களமும் விறுவிறுப்பாக உள்ளது. அதனைப் போலவே சின்ன மருமகள் சீரியலும் புதுவிதமான கதைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
அடுத்ததாக எட்டாவது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் இடம் பிடித்துள்ளது. இதுவரை மொக்கை வாங்கி வந்த பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பான கதைக்களத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் டிஆர்பி யில் முன்னுக்கு வந்துள்ளது. அடுத்ததாக விஜய் டிவியின் டாப் சீரியல்களான பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் சிறகடிக்க ஆசை சீரியல் ஏழாவது மற்றும் ஆறாவது இடத்தை பிடித்துள்ளன. ஏழாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும், 6வது இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியலும் இடம்பெற்றுள்ளது.
இருந்தாலும் முதல் ஐந்து இடங்களை சன் டிவி சீரியல்கள் தக்க வைத்துள்ளன. இதில் சுந்தரி சீரியல் 8. 81 டிஆர்பி புள்ளிகள் உடன் ஐந்தாமிடத்தில் உள்ளது. அடுத்ததாக ராமாயணம் மற்றும் மருமகள் ஆகிய இரண்டு சீரியல்களும் நான்காம் இடத்தை பிடித்துள்ளன. மூன்றாம் இடத்தை மூன்று முடிச்சு சீரியல் பிடித்துள்ளது. அடுத்ததாக சிங்க பெண்ணே சீரியல் இரண்டாம் இடத்தில் உள்ள நிலையில் கயல் சீரியல் 10.34 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…