பண்ணிட்டேன் வரலையா?!… பில் கேட்டது ஒரு குத்தமா?… சாப்பிட்ட கஸ்டமருக்கு அடியா?… சிறிய வாக்குவாதம்… உணவகத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

By Gayathri on கார்த்திகை 11, 2026

Spread the love

புனே அருகேயுள்ள லோனி கல்போர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ‘ஜகதம்பா’ உணவகத்தில், உணவிற்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியதை சரிபார்ப்பதில் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் எல்லை மீறி பெரும் மோதலாக மாறிய நிலையில், உணவகத்தின் உரிமையாளர், அவரது குடும்பத்தினர், ஊழியர்கள் மற்றும் அங்கு சாப்பிட வந்த வாடிக்கையாளர் ஒருவர் எனப் பலரும் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள லோனி கல்போர் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், அவரது சகோதரர் மற்றும் அவர்களுடன் இருந்த மேலும் இருவர் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறிய அளவிலான பணப் பரிவர்த்தனை சரிபார்ப்பு விவகாரம், பொதுமக்கள் முன்னிலையில் வன்முறையாக வெடித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.