புதுச்சேரியில் தவெக கட்சியின் ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர். ஆனால் ரோடு ஷோவுக்கு பதிலாக பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ளலாம் எனவும் போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், தாம் தனது முடிவை மாற்றிய விஜய் வரும் டிச.9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த, தவெக சார்பாக போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது
