தமிழகத்தில் நிலவி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உண்ணிக் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், நேற்று ஒரே நாளில் 301 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் 17,649 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தத் தமிழகப் பொது சுகாதாரத் துறையும் நகராட்சித் துறையும் இணைந்து தீவிரத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சுகாதாரத் துறை களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசு உற்பத்தி தடுப்புச் சோதனைகள் மற்றும் காய்ச்சல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நோய் பாதிப்பு அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டு பொது சுகாதாரத் துறை முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. முகக்கவசம் அணிவது அனைவருக்கும் கட்டாயமில்லை என்றாலும், கர்ப்பிணிகள், முதியவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள், குழந்தைகள் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்குத் தொற்று பரவாமல் தடுக்க அவசியம் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல காய்ச்சல் அல்லது இருமல் அறிகுறிகள் உள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பக் கூடாது என்றும் பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்வதுடன், நன்னீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது டெங்கு கொசுக்கள் உற்பத்தியைத் தடுக்க மிக அவசியமாகும். காய்ச்சல் அல்லது உடற்சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் சுய மருத்துவம் செய்துகொள்வதைத் தவிர்த்து, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று தகுந்த சிகிச்சை பெற வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.
பாலியல் வழக்கில் கைதாகியுள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான வீரமணிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில்…
தமிழக அரசியலில் வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், பல புதிய திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த இடைத்தேர்தலில்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் களம், தவெக தலைமையிலான கூட்டணியில் வெடித்துள்ள…
சென்னை மாவட்டம் போரூர் பகுதியில் 23 வயதான இளைஞர் சிவ சூர்யா, தனது தந்தை கௌதமனுடன் சேர்ந்து ஆர்வத்துடன் பேட்மிண்டன்…
தமிழகத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத்திற்கான ஓய்வூதியம்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கிராமப்புற எல்லைக்குட்பட்ட நரேனா போலிஸ் சரகத்தில் உள்ள பிங்குன் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபர்,…