baby

“நினைவுக்காக மட்டுமே எடுத்தேன்…” மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுடன் போட்டோ… கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவருக்கு குவியும் எதிர்ப்பு…!!

By Devi Ramu on புரட்டாதி 7, 2026

Spread the love

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வரும் சுதேஷ்ணா மொண்டல், பிரசவ அறை மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த பிறந்த குழந்தைகளுடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இது நோயாளிகளின் தனியுரிமை மற்றும் மருத்துவ நிபந்தனைகளுக்கு எதிரானது எனப் பலரும் விமர்சித்தனர். குறிப்பாக, பிரபல கல்லீரல் மருத்துவ நிபுணரான ‘தி லிவர்டாக்’ டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸ், “தேசிய மருத்துவ ஆணையத்தில் புகார் அளித்தால் உங்களுக்குப் பெரிய சிக்கல் ஏற்படும்” எனச் சுட்டிக்காட்டி அப்பதிவுகளை நீக்குமாறு எச்சரித்தார்.

   

இதனைத் தொடர்ந்து, பிறந்த குழந்தைகளுடன் எடுக்கப்பட்ட அனைத்துப் புகைப்படங்களையும் நீக்கிய சுதேஷ்ணா மொண்டல், பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார். தான் நினைவாக மட்டுமே அந்தப் படங்களை எடுத்ததாகவும், இது தவறானது என்று தெரியாமல் செய்துவிட்டதாகவும் குறிப்பிட்ட அவர், இனிமேல் இதுபோன்ற புகைப்படங்களைப் பதிவிட மாட்டேன் என்றும் உறுதி அளித்துள்ளார். மேலும், கல்லூரி நிர்வாகத்தின் அழுத்தத்தால் தான் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.