“சொந்த கணவனே புரோக்கர்…. மகளையே விற்கும் பகீர் வழக்கம்”…. இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் நடக்கும் அதிர்ச்சி சம்பவம்.. பின்னணியில் இருக்கும் ‘வாடியா’ கிராமம்….!

By Nanthini on புரட்டாதி 20, 2026

Spread the love

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பனஸ்காந்தா மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ‘வாடியா’. சுமார் 750 மக்கள் வாழும் இந்த கிராமத்தில், பெண்களை அவர்களின் சொந்த குடும்பத்தினரே கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளும் கொடூர வழக்கம் தொடர்ந்து வருகிறது. வெளி ஆட்களை அழைத்து வந்து சொந்த மனைவி மற்றும் மகளை பாலியல் உறவுக்கு வற்புறுத்தும் அவலம் இங்கு ஒரு தொழிலாகவே நடைபெற்று வருகிறது.

இந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் உழைத்துச் சம்பாதிப்பதற்குப் பதிலாக, தங்கள் குடும்பத்துப் பெண்களை வைத்து இடைத்தரகர்களாகச் செயல்பட்டுப் பணம் சம்பாதிக்கின்றனர். நாள்தோறும் காலையிலேயே வாடியா கிராமத்தின் அருகே உள்ள பாலன்பூர் – தாராட் நெடுஞ்சாலைக்குச் செல்லும் ஆண்கள், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளைத் தடுத்து நிறுத்தி, தங்கள் வீட்டுப் பெண்களுடன் உறவு கொள்ளுமாறு அழைத்து வரும் அதிர்ச்சியளிக்கும் நடைமுறை இன்றளவும் தொடர்கிறது.

   

இந்திய சுதந்திர காலம் முதலே இங்கு இந்த வழக்கம் தொடர்ந்து வருவதோடு, சட்டவிரோதமான குழந்தை திருமணங்களும் தடையின்றி நடைபெற்று வருகின்றன. ஏழு வயதே ஆன சிறுமிகளுக்குக் கூட நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, சில ஆண்டுகள் கழித்துத் திருமணம் செய்து வைக்கப்படும் சூழல் நிலவுகிறது. குடும்பச் சூழல் மற்றும் பாரம்பரிய வழக்கமாக மாற்றப்பட்ட இந்த கொடூரக் கலாச்சாரத்தால், தலைமுறை தலைமுறையாகப் பெண்கள் தங்கள் உரிமைகளையும் சுயமரியாதையையும் இழந்து தவித்து வருகின்றனர்.

   

இருப்பினும், இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க அந்த கிராமத்தைச் சேர்ந்த தாய்மார்களும் பாட்டிகளும் தற்போது தீவிரமாகப் போராடி வருகின்றனர். தங்கள் தலைமுறையோடு இந்த கொடுமை முடிய வேண்டும் என்றும், தங்கள் மகள்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்தத் தொழிலுக்குள் வரக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர். அவர்களின் இந்தத் தொடர் முயற்சியின் காரணமாக, தற்போதுள்ள இளம்தலைமுறைச் சிறுமிகள் படிப்படியாகப் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்டு வருகின்றனர்.