நாமக்கல் மாவட்டச் சார்பதிவாளர் அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் நேற்று (மே 29) திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் . இந்த ஆய்வின்போது, அலுவலகத்திற்கு ஆவணப் பதிவு மற்றும் பல்வேறு சேவைகளுக்காக வந்திருந்த பொதுமக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் அவர் விரிவாகக் கேட்டறிந்தார் . பொதுமக்கள் தங்களின் பணிகளை எவ்விதத் தாமதமும் இன்றி தடையின்றி முடிப்பதற்குத் தேவையான வசதிகள் குறித்துப் பார்வையிட்டார் .
அலுவலக அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனையின்போது, ஆவணப் பதிவுகளில் லஞ்ச முறைகேடுகளை முற்றிலும் தவிர்த்து, முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார் . மேலும், பொதுமக்கள் பதிவு செய்யும் சொத்து பத்திரங்களை எவ்வித இழுபறியுமின்றி அன்றைய தினமே அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் . முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் லஞ்சம் வாங்குவோர் மீது சட்டப்பூர்வமாக உடனடி கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
