வரும் மாதங்களில் பாஜகவின் பல மூத்த தலைவர்கள் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், பி.எல். சந்தோஷ், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, மற்றும் அனுராக் சிங் தாக்கூர் ஆகியோர் இந்த லிஸ்டில் அடங்குவார்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷா டிசம்பர் 15, 2025 அன்று தமிழகம் வருகிறார்.
அவர் வேலூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய ஆலோசனைகளும் நடத்த உள்ளார். யோகி ஆதித்யநாத், பி.எல். சந்தோஷ், ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு மற்றும் அனுராக் சிங் தாக்கூர் ஆகியோரும் தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்வதற்காக அடுத்தடுத்து வருகை தர திட்டமிட்டுள்ளனர்.
இந்தத் தலைவர்கள் அனைவரும் மத ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த திருப்பரங்குன்றம் கோவிலுக்கு ஒரு யாத்திரையாகச் செல்ல திட்டமிட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான தற்போதைய சர்ச்சைகளைத் தொடர்ந்து, இந்தத் தலைவர்களின் வருகை அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த வருகைகள் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் வியூகத்தின் ஒரு பகுதியாகும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்
