BREAKING: அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த முக்கிய புள்ளி… அதிர்ச்சியில் எடப்பாடி..!!

By Soundarya on பங்குனி 28, 2026

Spread the love

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் டி.வி.பாலமுருகன், அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அவர் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பட்டியலில் விஸ்வநாதன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த பாலமுருகன் இந்த முடிவை எடுத்துள்ளார்.

அதிமுகவிலிருந்து விலகிய அவர், அமைச்சர் ஐ. பெரியசாமி முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். தேர்தல் நேரத்தில் ஆத்தூர் தொகுதியில் நடந்துள்ள இந்த கட்சித் தாவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.