“அம்மா தற்கொலை பண்ணிக்கிட்டா…” பெற்ற தாயை மாடியில் இருந்து தள்ளிவிட்ட பேராசிரியர்… குஜராத்தில் அரங்கேறிய நெஞ்சை பதறவைக்கும் கோர சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 24, 2026

Spread the love

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில், நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தனது 64 வயது தாயாரை, பேராசிரியர் ஒருவர் மாடியில் இருந்து தள்ளிவிட்டுப் படுகொலை செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி நெஞ்சைப் பதறவைத்துள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுத் தவித்து வந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரான ஜெயஸ்ரீ நாத்வானி என்பவரை, அவரது மகனும் பேராசிரியருமான சந்தீப் நாத்வானி (36) கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி வீட்டின் மாடியில் இருந்து கீழே தள்ளிப் படுகொலை செய்துள்ளார்.

தாயின் நீண்ட நாளைய நோயால் ஏற்பட்ட விரக்தியில் இக்கொடூரத்தைச் செய்த அவர், வெளியில் எங்குமே தெரியாமல் தற்கொலை என்று நாடகமாடியுள்ளார். பல மாதங்களுக்குப் பிறகு கிடைத்த ரகசியத் தகவல் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2021-ஆம் ஆண்டு கொலையாளி மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. பெற்ற தாயையே ஈவு இரக்கமின்றித் தீர்த்துக்கட்டிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.