#image_title
சிம்பு என்று அழைக்கப்படும் சிலம்பரசன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான முன்னணி நடிகராவார். இவரது தந்தை டி ராஜேந்தர் தமிழ் சினிமாவில் பணியாற்றியா இயக்குனர் மற்றும் நடிகராவார். 1980களில் தனது தந்தை இயக்கிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிம்பு. 2002 ஆம் ஆண்டு இவரது தந்தை இயக்கிய “காதல் அழிவதில்லை” திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் சிம்பு. தொடர்ந்து கோவில், குத்து, மன்மதன், சரவணா, வல்லவன், காளை, சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா, ஒஸ்தி, போடா போடி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் சிம்பு. 2010 காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார் சிம்பு.
அதற்குப் பிறகு சற்று உடல் எடை கூடியதால் மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக ஒர்க்அவுட் செய்து உடல் எடையை குறைத்தார் சிம்பு. அந்த கடினமான பயண வீடியோவை சிம்பு வெளியிட்டார். இதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். அதன்பிறகு இவரை Atman சிம்பு என்றும் ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்தனர். சமீபத்திய வருடங்களில் சிம்பு எந்த ஒரு படங்களில் கமிட்டானாலும் அவர் ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வருவதில்லை படத்தை முடித்து கொடுப்பதில்லை என்று தயாரிப்பாளர்கள் பக்கத்தில் கம்ப்ளைன்ட்கள் எழுந்தது.
தற்போது அதையெல்லாம் சரிபடுத்திக் கொண்டு மீண்டும் அடுத்த அடுத்த படங்களில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார் சிம்பு. கமல்ஹாசனுடன் இணைந்து இவர் நடித்த ThugLife திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அடுத்ததாக சிம்பு பார்க்கிங் திரைப்பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனிடம் கதை கேட்டு அந்த கதை மிகவும் பிடித்து போய் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார்.
ஆனால் STR படங்கள் பட்ஜெட் செட் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டு ஆரம்பிக்காமலே இருக்கிறது. அஸ்வத் மாரிமுத்துவுடனும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் சிம்பு ஒரு படத்திற்கு 50 கோடி சம்பளம் கேட்கிறாராம். இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம்.
தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவைப் பற்றியது இந்த செய்தி. அதில், 'வொர்க் ஃபிரைம் ஹோம்' என்பது பலருக்குக்…
தமிழக முதலமைச்சர் விஜய் ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை நடத்தி வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ…
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசியல் களம் மற்றும் கட்சியின் எதிர்கால வியூகம்…
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு தீவிரமாகச் சேகரித்து வருவதாகத் தகவல்கள்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களில் அதிரடி ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.…