கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தியாகராஜன். கொம்பேறி மூக்கன் தீச்சட்டி கோவிந்தன் நீங்கள் கேட்டவை மலையூர் மம்பட்டியான் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் ஹீரோவாக நடித்தவர். இப்போது திரைப்பட தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருக்கிறார். இவரது மகன் தான் நடிகர் பிரசாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற தயாரிப்பாளர் தியாகராஜன் கூறியதாவது, ஏஆர் முருகதாஸ் இயக்கிய முதல் படம் தீனா. அப்போது என் மகன் பிரசாந்த் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் என்னிடம் வந்த ஏஆர் முருகதாஸ் தீனா படம் பற்றி சொன்னார். நான் என் மகன் சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். 2 நாட்கள் பொருங்கள் அவர் வந்தவுடன் பேசி முடிவெடுக்கலாம் என்று சொன்னேன்.
இல்லை சார். எனக்கு ரொம்ப அவசரம் என்று சொல்லிவிட்டு அவர் தீனா படத்தை அஜீத்தை வைத்து ஆரம்பித்து விட்டார். நான் 2 நாள் மட்டுமே இருக்க சொன்னேன். ஆனால் அவர் அதை கேட்கவில்லை. அதற்குள் அவர் தீனா படத்தை எடுக்கத் தொடங்கி விட்டார் என்று நடிகர் தியாகராஜன் கூறியிருக்கிறார். அந்த படத்தில் பிரசாந்த் நடித்திருந்தால் அது அவருக்கு ஒரு மைல்கல்லாக இருந்திருக்க வாய்ப்புள்ளது.
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரான நடிகர் விஜய், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் தற்காலிகப்…
ஜெய்ப்பூர் மாளவியா நகர் பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவரைத் துன்புறுத்திய வாலிபர் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான…