தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. வெங்கட் பிரபு இயக்கிய கோட் திரைப்படத்தை எஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. இந்த திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் விஜய், அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

த்ரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இந்த நிலையில் கோட் திரைப்படம் கோடிக்கணக்கில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. படம் சூப்பர் ஹிட் ஆனது. கோட் திரைப்படத்தில் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவாவும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரும் பிரபல தயாரிப்பாளர் ஆவார். கோட் திரைப்படம் வெற்றி அடைந்ததால் சிவா தளபதி விஜய்க்கு ஒரு மோதிரத்தை பரிசாக கொடுத்துள்ளார்.

சமீபத்தில் அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா அளித்த பேட்டியில் கூறியதாவது, கோட் படத்தோட ஷேர் தமிழ்நாட்டில 100 கோடியே தாண்டிருச்சு. அதுக்காக இந்த மோதிரத்தை கொடுக்கிறேன் என்று சொல்லி கொடுக்கணும்னு தான் நான் நினைச்சேன். ஸ்டேஜ்ல எல்லாரும் வாழ்த்து சொல்லிட்டு இருக்கும்போது நான் மோதிரத்தை கொடுத்தேன்.

தீபாவளிக்கு பட்டாசு பார்த்த குழந்தை போல அவர் முகத்துல அப்படி ஒரு சிரிப்பு, சந்தோஷம். அத பாத்த உடனே ரொம்ப குஷி ஆயிட்டாரு. நானும் கொஞ்ச நேரம் போட்டுட்டு அதை எடுத்து வச்சுருவாரு நினைச்சேன். அது எங்கேயாவது கீழ விழுந்துரும் என்று நான் உடனே சார் குடுங்க உங்க அசிஸ்டன்ட் கிட்ட கொடுத்துடறேன்னு சொன்னேன். அவரு இல்ல நல்லா இருக்குன்னு ரொம்ப நேரமே அதை போட்டு இருந்தாரு. எனக்கு அது பெருமைக்குரிய தருணமா இருந்துச்சு என கூறியுள்ளார்.
