நடிகர் ஸ்ரீ-க்கு எஸ்.ஆர் பிரபு இப்படி ஒரு உதவி செஞ்சிருக்காரா?.. இந்த விஷயம் தெரியாம இப்படி பேசிட்டாங்களே..!

Spread the love

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்த ஹீரோவாக வளர்ந்து நிற்கும் நடிகர்தான் ஸ்ரீராம். ஸ்ரீராம் நடராஜன் என்பதுதான் இவருடைய முழு பெயர். சினிமாவுக்காக ஸ்ரீ என வைத்துக்கொண்டார். இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற திரைப்படம் மூலமாக தான் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த திரைப்படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும் இவருடைய நடிப்பு பலருக்கும் பிடித்திருந்தது. சென்னையில் பிறந்து வளர்ந்த ஸ்ரீ லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார்.

அந்தத் தொடரில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனை தொடர்ந்து பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18 /9 திரைப்படம் தான் இவர் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படம் ஆகும். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த இவருக்கு ரசிகர்கள் தங்கள் பாராட்டை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சோன்பப்படி, வில்லம்பு ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் வில்லம்பு திரைப்படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து பெயர் வாங்கிக் கொடுத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் திரைப்படத்திலும் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக ஸ்ரீ நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் நான்கு நாட்களிலேயே தாக்குப் பிடிக்க முடியாமல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். கடந்த 2003 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான இறுக்கப்பற்று என்ற திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தான் இவருடைய நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் ஆகும். அதன் பிறகு ஸ்ரீ நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை.

இப்படியான நிலையில் சமீப காலமாக இவரைப் பற்றிய செய்திதான் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இவரை யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதுவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இவர் வெளியிட்ட வீடியோ மூலமாகத்தான் இவருடைய தற்போதைய நிலை வெளிச்சத்திற்கு வந்தது. அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் உடல் மெலிந்து பார்ப்பதற்கே பரிதாப நிலையில் இருக்கின்றார். இவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரை பிரபலங்கள் கூட இவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தான் கூறி வருகின்றனர். மறுபக்கம் வில்லம்பு திரைப்படத்தில் நடித்த பிறகு இவருக்கு சரியான சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் அவருடைய நெருங்கிய தோழி ஒருவர் தெரிவித்திருந்தார். தற்போது ஸ்ரீ எங்கு இருக்கிறார் என்று அனைவருமே தேட தொடங்கி விட்டனர்.

இப்படியான நிலையில் இறுதியாக ஸ்ரீ நடித்த இறுகப்பற்று படத்தின் அவருக்கு சம்பள பாக்கி என்று பரவிய செய்தி உண்மை இல்லை என்று அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தெரிவித்திருந்தார். அவருக்கு பேசிய சம்பளத்தை விட கூடுதலாக தான் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அது மட்டும் அல்லாமல் எஸ் ஆர் பிரபு ஸ்ரீயின் சகோதரி திருமணத்திற்கு 5 லட்சம் ரூபாய் பண உதவியும் செய்துள்ளார். இதையெல்லாம் தெரியாமல் நெட்டிசன்கள் எஸ்.ஆர். பிரபு ஸ்ரீக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாக பல வதந்திகளை பரப்பி வருகிறார்கள். சமீபத்தில் கூட எஸ்.ஆர் பிரபு ஸ்ரீயைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என்று நம்புவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

6 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

6 மணத்தியாலங்கள் ago

கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா வீட்டை விட்டு போ..! 25 வயசானாலே கல்யாணம் தானா..? 25 வயதுப் பெண்ணின் குமுறல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…

6 மணத்தியாலங்கள் ago

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

7 மணத்தியாலங்கள் ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

7 மணத்தியாலங்கள் ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

7 மணத்தியாலங்கள் ago