தனது இசையால் பலரையும் கட்டி போட்டவன் தான் இசைஞானி இளையராஜா. இவருடைய இசைக்கி மயங்காதவர்கள் யாருமே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். அன்னக்கிளி திரைப்படம் மூலமாக அறிமுகமான இளையராஜா இன்னும் இசையின் மூலமாக ராஜாங்கம் நடந்ததி கொண்டிருக்கிறார். இவரின் முதல் படத்திலிருந்து இவருடைய பாடல்கள் சரித்திரமாக தொடங்கி விட்டது. அன்னக்கிளி உன்னைத் தேடுதே என்ற பாடலின் ஹம்மிங் மனதிற்குள் புகுந்து மனதை கரைத்து விடும். இப்படி அடுத்தடுத்த படத்திற்கு இசையமைத்து அனைவரையும் கட்டுப்போட்ட இளையராஜா இதுவரை 1500 க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
ஏராளமான மேடை நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றியுள்ள இளையராஜா பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் கூட லண்டனில் தனது முதல் சிம்போனியை அரங்கேற்றினார். இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் கடந்த சில வருடங்களாக இளையராஜா தனது பாடல்களை முறையான அனுமதி பெறாமல் திரைப்படங்களில் யாராவது பயன்படுத்தினால் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
சமீபத்தில் கூட குட் பேட் அக்லி படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியதற்கு நஷ்ட ஈடு கேட்டு அப்படத்தின் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில் தாங்கள் முறையான அனுமதி பெற்ற பிறகு தான் இந்த பாடல்களை பயன்படுத்தியதாக பதில் அளித்திருந்தனர். சினிமாவை பொறுத்தவரையில் இளையராஜா சம்பளம் வாங்கிக்கொண்டு இசையமைத்த பிறகு அந்த பாடல்கள் தயாரிப்பாளர்களுக்கு தான் சொந்தம். அந்தப் பாடல் உரிமைகளை அவர் ஒரு நிறுவனத்திடம் விற்று விட்டால் அந்த நிறுவனத்திற்கே சொந்தம்.
படங்களில் இளையராஜா பாடல்களை பயன்படுத்தும் போது எந்த நிறுவனத்திடம் உரிமை இருக்கிறதோ அவர்களுக்கு பணம் கொடுத்து விடுகிறார்கள். இதில் இளையராஜா நோட்டீஸ் அனுப்புவதில் நியாயம் இல்லை என்பது தான் பலருடைய கருத்தாக உள்ளது. இப்படியான நிலையில் இளையராஜாவே பல ஹிந்தி மற்றும் ஆங்கில பாடல்களை காப்பியடித்து பாடல்களை போட்டு இருக்கிறார். அவர்களெல்லாம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பினால் இவர் பணம் கொடுப்பாரா என ஒரு தரப்பினர் சமூக வலைத்தளங்களில் பொங்கி எழுந்து வருகிறார்கள்.
அதற்கான ஒரு ஆதாரத்தையும் தற்போது நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளனர். SKY BAND குழுவின் LA DANZO ஆல்பம் வெளிவந்த ஆண்டு 1979. அந்த ஆல்பத்தில் வரும் இசையை காப்பி அடித்துதான் ராஜா முரட்டுக்காளை படத்தில் வரும் ’எந்த பூவிலும் வாசம் உண்டு’ பாடலையே உருவாக்கினார். முரட்டுக்காளை வெளிவந்த ஆண்டு 1980 என ஆதாரத்தோடு ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…