சந்தோஷ் கோபிநாத் இயக்கத்தில் சேவகர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தை சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரிக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேவகர் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் ராஜன் பேசியதாவது, பெரிய நடிகர்களோட படங்கள் சரியா ஓடுறது இல்ல. ஆனா சின்ன சின்ன படங்கள் நல்ல வெற்றி பெற்றுள்ளது.
குட் நைட், டாடா, போர் தொழில், வாழை இந்த படங்கள் நல்ல ஓடியிருக்கு. தமிழ் பண்பாடு கலாச்சாரம் கிராமியம் அதை அடிப்படையாக வைத்து எடுக்கிற படங்கள் வெற்றி பெறும். சேவகர் படம் நிச்சயமா வெற்றி பெறும். சேவகர் என்றால் சேவை செய்பவர். இல்லாதவர்களுக்கு கொடுப்பவர். முடியாதவர்களை கை தூக்கி விடுபவர், பிரதிபலன் பார்க்காமல் உழைக்கிறவன் தான் சேவைக்கு அதிபதி சேவகர்.
போன மாசம் ஒரு ஆடியோ பங்ஷன் நடந்துச்சு. அதுல ஒரு பாட்டு. அது கிளாமர் சாங் அதுல பஞ்சாபி பலகாரம். ஆகல சேதாரம் அப்படின்னு வரிகள் வந்துச்சு. நான் உடனே கிண்டலா அந்த பாப்பாவை கூப்பிட்டு பாத்துட்டு. அம்மா நீ சேதாரம் ஆகல. நல்ல பிள்ளை போய் உட்காரு அப்படின்னு சொன்னேன். அதை மீடியால பாத்துட்டு என்னென்னலாமோ போட்டு விட்டுட்டாங்க. அது என் பேத்தி வயசு பொண்ணு.
ஒரு காமெடிக்காக பண்ணது அப்படியே ஆயிருச்சு. பெண்கள் விருப்பம் இல்லாமல் அடுத்தவன் விரல் கூட மேல படக்கூடாது. ஒரு தடவை தங்கச்சி குஷ்பூ ஒரு நிகழ்ச்சிக்கு போகும் போது ஒருத்தன் முதுகுல தட்டிட்டான். அதுக்கு கில்லாடி பொண்ணு. அங்கேயே அவனை பளார்னு அடிச்சிட்டாங்க. அப்போ நான் பப்ளிக் ஆடியோ லான்ச்சில அந்த ஆள செருப்பால அடிச்சி இருக்கணும் அப்படின்னு சொன்னேன் என ராஜன் பேசியுள்ளார்.