Connect with us

விஜய் சார் போன் பண்ணி திட்டுனாரு…. நான் ரொம்ப பீல் பண்ணேன்…. மனம் திறந்த லியோ ப்ரொடியூசர் லலித்குமார்…!!!

CINEMA

விஜய் சார் போன் பண்ணி திட்டுனாரு…. நான் ரொம்ப பீல் பண்ணேன்…. மனம் திறந்த லியோ ப்ரொடியூசர் லலித்குமார்…!!!

 

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவதாக லியோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் அதிகளவு வசூலை அள்ளி குவித்து சாதனை படைத்துள்ளது.

   

இதனால் படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் பல குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரித்திருந்தார். இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றதால் அவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். அதைத்தொடர்ந்து அவர் பல இடங்களில் பேட்டி கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து இருந்த லலித்குமார் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதில் விக்ரம் நடிப்பில் உருவான மகான் திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்த போது விஜய் தனக்கு போன் செய்து இந்த திரைப்படத்தை ஏன் ஓடிடியில் வெளியிட்டீர்கள் என்று திட்டியதாக தெரிவித்தார். அதைக் கேட்டு நான் மிகவும் மன வருத்தப்பட்டேன் என்று கூறினார்.

ஏனென்றால் அன்றிருந்த சூழ்நிலையில் எனக்கு வேறு வழி தெரியவில்லை. மகான் மற்றும் கோபுர இரண்டு திரைப்படங்களும் பெண்டிங்கில் இருக்கின்றது. இரண்டு திரைப்படத்தில் ஏதாவது ஒரு திரைப்படத்தை நான் வெளியிட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் மகான் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட்டேன் என்று கூறினார் தயாரிப்பாளர் லலித்குமார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top