Categories: சினிமா

நடிப்பு வரலைன்னு மீனாவை அடித்த அம்மா.. கையில அது கொடுத்தா தான் நடிக்கவே ஆரம்பிப்பாங்க.. பிரபல தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்..!

Spread the love

தென்னிந்தியா சினிமா உலகில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி அதன் பிறகு கதாநாயகியாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதனிடையில் மீனா வித்தியாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார். இவர் விஜயுடன் தெறி திரைப்படத்தில் நடித்திருந்தார். மீனாவின் கணவருக்கு ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை இருந்ததால் இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய அளவுக்கு அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. பிறகு இவருடைய உடல் நிலை மிகவும் மோசமாகி சிகிச்சை பலனின்றி கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் உயிரிழந்து விட்டார்.

வித்யாசாகரின் இறப்புக்கு பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதேசமயம் மீனாவுக்கு ஆறுதலாக அவருடைய தோழிகள் தான் இருக்கிறார்கள். கணவரின் இறப்பிலிருந்து மீண்டு வந்த மீனா தற்போது மீண்டும் படங்களில் நடித்துக்கொண்டோம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றும் வருகிறார்.  இப்படியான நிலையில் நடிகை மீனா குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். அதில், நான் மீனாவை பேபி மீனா என்று தான் சொல்வேன். சின்ன வயசுல இருந்து எனக்கு அவங்கள நல்லாவே தெரியும். எனக்கு ஒரு 12 வயசு இருக்கும்போது அவங்களுக்கு எட்டு வயசு இருக்கும்.

அப்பவே ரொம்ப துரு துருனு இருப்பாங்க. சின்ன வயசுல நடிக்கும் போது ஏதாவது ரெண்டு டேக் எடுத்துட்டாங்கனா மீனாவோட அம்மா அவங்கள அடிச்சிடுவாங்க. அந்த வயசுல ஒண்ணுமே அறியாத மீனா என்னால நடிக்க முடியாது போ என்று கோச்சிக்கிட்டு போயிடுவாங்க. உடனே எங்க அப்பா மீனாவோட அம்மாவை கூப்பிட்டு சின்ன பிள்ளையை எதுக்கு இப்படி அடிக்கிற அவங்க கிட்ட சாதுவா தான் பேசணும் என்று சொல்வாரு. எப்பவுமே மீனா ஓட ஷூட்டிங் என்றால் நிறைய சாக்லேட் வாங்கி வச்சிருவாரு. அந்த காலத்துல ஒரு நாளைக்கு பத்து சாக்லேட் கொடுத்து தான் மீனா கிட்ட வேலையே வாங்க முடியும். சின்ன வயசா இருக்கும்போதே சொல்றத கேட்டு அவ்வளவு அருமையான நடிப்பாங்க.

குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த மீனாவுக்கு 13 வயசு ஆகும்போது ஹீரோயினியாகவும் நடிக்க முடியாமல் குழந்தையின் நட்சத்திரமாகவும் நடிக்க முடியாமல் நடுத்தரத்தில் இருந்த சமயத்தில் மீனாவின் அம்மா எங்க அப்பாவை சந்திக்க ஆபிசுக்கு வருவாங்க. இப்போ ஒண்ணுமே சமாளிக்க முடியல என்று சொன்னதும் எங்க அப்பா இந்த பொண்ணு வருங்காலத்தில் தமிழ் சினிமாவை வியக்கும் அளவுக்கு பெரிய நடிகையா வருவாங்க என்று சொல்லி அனுப்புவார். அன்னைக்கு அவர் சொன்ன மாதிரியே தமிழ் சினிமாவுல அத்தனை நடிகர்களுடைய ஜோடி போட்டு நடித்து ஒரு கலக்கு கலக்கி விட்டார் மீனா என்று பாலாஜி பிரபு பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

BREAKING: தவெக MLA ராஜினாமா?… சொந்த கட்சி நிர்வாகியே போட்ட வெடிகுண்டு புகாரால் பரபரப்பு…. விஜய்க்கு அடுத்த ஷாக்…!

சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…

5 minutes ago

“சபை முடிஞ்சிருச்சுன்னு டிவில பார்த்தா அமைச்சர் பேசிக்கிட்டிருக்கார” உதயநிதி வைத்த குற்றச்சாட்டு.. சபாநாயகர் கொடுத்த அதிரடி ‘ட்விஸ்ட்’..!!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…

7 minutes ago

சட்டமன்றத்தில் விஜய் ருத்ரதாண்டவம்..! “Evils பற்றி Devils பேசக் கூடாது” முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சைகையைச் செய்து காட்டி முதல்வர் விஜய் அதிரடி..!!!

தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…

14 minutes ago

“கடந்த 9 மாசமா சட்டம் ஒழுங்கு DGP-யே தமிழ்நாட்டுல இல்ல” திமுக ஆட்சியின் அலட்சியத்தை அம்பலப்படுத்திய CM விஜய்…!!

சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…

17 minutes ago

மக்கள் பணத்தை தொட்ட யாரையும் சும்மா விட மாட்டோம்… ஊழல் ஒன்னு ஒன்னா வெளியே வரும்… ஏன்பா பயந்து நடுங்குறீங்க..? சட்டசபையை அதிர வைத்த முதல்வர் விஜய்..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

21 minutes ago

BREAKING: முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு..!!

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…

24 minutes ago