பிரபல இயக்குனரான பா.ரஞ்சித் தங்கலான் படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்த படத்தில் விக்ரம் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பா.ரஞ்சித் இயக்கும் படம் என்றாலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். இதனையடுத்து அட்டகத்தி தினேஷ், ஆர்யா, அசோக் செல்வன் ஆகியோர் கூட்டணியில் வேட்டுவம் திரைப்படத்தை பா.ரஞ்சித் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
நீலம் ப்ரொடக்ஷன், நீலம் ஸ்டுடியோ நிறுவனங்களின் மூலமாக பா.ரஞ்சித் பல்வேறு படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் ஜெய் பீம், குட் நைட், லவ்வர் ஆகிய படங்களில் நடித்த மணிகண்டன் நடிக்கும் படத்தை பா.ரஞ்சித் தயாரிக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே பா ரஞ்சித் இயக்கத்தில் காலா படம் ரிலீஸ் ஆனது. அந்த படத்தில் மணிகண்டன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகனாக நடித்துள்ளார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக பா ரஞ்சித் உடன் இணைந்து மணிகண்டன் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரஞ்சித்திடம் இது உதவி இயக்குனராக வேலை பார்த்த ஒருவர்தான் அந்த படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மணிகண்டன் நடிப்பில் உருவான குட் நைட், லவ்வர் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. அந்த படங்களில் மணிகண்டன் ரசிகர்களை கவரும் விதமாக எதார்த்தமாக நடித்திருப்பார். அந்த வகையில் இந்த படமும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.