பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து அரசு இதுவரை எந்தப் புதிய அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால், 2026 ஜனவரி 1-ஆம் தேதிக்குள் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் செல்லாததாகக் கருதப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உங்கள் கார்டு இன்னும் செயல்பாட்டில் உள்ளதா என்பதை வருமான வரித்துறையின் இணையதளம் மூலம் உடனடியாகச் சரிபார்த்துக் கொள்வது அவசியம்.
பான் கார்டு முடக்கப்பட்டால், வங்கிக் கணக்கு தொடர்பான செயல்பாடுகள், பணப் பரிமாற்றம் மற்றும் வருமான வரித் தாக்கல் போன்ற முக்கிய வேலைகளைச் செய்ய முடியாமல் சிக்கல்கள் ஏற்படும். ஒருவேளை உங்கள் பான் கார்டு ஏற்கனவே செயலிழந்துவிட்டாலும், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை.
குறிப்பிட்ட அபராதத் தொகையைச் செலுத்துவதன் மூலம் நீங்கள் மீண்டும் ஆதாரை இணைத்து உங்கள் பான் கார்டைச் செயல்படுத்த முடியும். ஆனால், இந்த நடைமுறை முடிந்து கார்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வர சில நாட்கள் முதல் வாரங்கள் வரை ஆகலாம். பான் கார்டு செயலிழந்த நிலையில் இருந்தால், பணப் பரிவர்த்தனைகளின் போது கூடுதல் வரி பிடித்தம் செய்யப்பட வாய்ப்புள்ளதால், கூடுதல் தாமதத்தைத் தவிர்த்து உடனடியாக இணைப்பதே நல்லது.
