குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனில் தொகுப்பாளியான பிரியங்கா உட்பட ஏராளமானோர் போட்டியாளராக பங்கேற்றனர். இந்த சீசனில் பிரியங்கா டைட்டிலை வென்றார். பிரியங்கா சுஜிதா உள்பட ஆறு போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு தேர்வானார்கள். நேற்றைய தினம் பிரம்மாண்ட மேடையில் பிரியங்காவுக்கு டைட்டில் வின்னராக வெற்றிவாகை சூடப்பட்டது.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக கிச்சன் சூப்பர் ஸ்டார் போட்டியில் பங்கேற்ற வெற்றி பெற முடியவில்லை. ஆனால் இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வின்னர் ஆகிவிட்டேன். பறப்பது, நடப்பது, நீந்துவது என அனைத்தையுமே என்னால் சமைக்க முடியும். இரவும் பகலும் பார்க்காமல் எனக்கு சமையல் கற்றுக் கொடுத்த அனைவருக்கும் நன்றி.
சமைக்கும் போது எனக்கு பொறுமையாக சொல்லிக் கொடுத்து நான் சரியாக சமைக்கும் வரை என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி. வாரம்தோறும் நான் சமைக்கும் சமையலை பல நேரங்களில் நான் சுவைக்கவே மாட்டேன். அவற்றை சுவைத்து குறை மற்றும் நிறைகளை சொன்ன நடுவர்களுக்கு நன்றி. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்த போட்டியாளர்களும் கோமாளிகளும் நிறைய முறை எனது சாப்பாடு ருசித்து பார்த்திருக்கிறார்கள்.
அவர்கள் எனது சமையலில் இருக்கும் நிறைய குறைகளை சொல்லி என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள். எனக்கு நான்தான் போட்டியாளர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரை குறிப்பிட்டு அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். அந்த பதிவு சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. மேலும் கேப்ஷனில் சோறு தான் எல்லாமே என டேக் செய்துள்ளார்.
View this post on Instagram