ராஜமவுலி படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா கேட்ட சம்பளம்.. இந்திய சினிமாவிலேயே எந்த ஒரு நடிகையும் பெறாத தொகை..!

By Nanthini on மாசி 1, 2025

Spread the love

இந்திய சினிமாவை பொறுத்தவரையில் அதிக சம்பளம் பெறக்கூடிய நடிகைகளில் முன்னணியில் இருந்து வருபவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழ் சினிமாவில் நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நிலையில் இந்திய சினிமாவில் பிரியங்கா சோப்ரா முதலிடத்தில் உள்ளார். இவர் சமீபத்தில் கூட ஒரு படத்தில் நடிக்க சுமார் 40 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியானது.

EXCLUSIVE: Has Priyanka Chopra Signed SS Rajamouli and Mahesh Babu's Next?  | Filmfare.com

   

இதனைத் தொடர்ந்து தற்போது பிரியங்கா சோப்ரா இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க அவர் கமிட் ஆகியுள்ள நிலையில் அவர் கேட்ட சம்பளம் குறித்த விவரம் தற்போது வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ராஜமவுலி தற்போது மகேஷ்பாபுவின் 29வது படமான SSMB 25 படத்தினை இயக்கி வருகின்றார். இந்த படத்தில் நடிகையாக பிரியங்கா சோப்ரா நடித்து வரும் நிலையில் ஷிரி துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

   

ராஜமௌலி படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரியங்கா சோப்ரா!

 

சுமார் ஆயிரம் கோடி பட்ஜெட்டுக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா சம்பளமாக சுமார் 30 கோடி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் கேட்டுள்ள சம்பளத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனம் கொடுக்க சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலமாக இந்திய சினிமாவில் மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக பிரியங்கா சோப்ரா மாறி உள்ளார்.