தமிழ் திரையுலகருக்கு பிரியாமணி இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டார். தமிழில் பிரியாமணி கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தில் முதலில் நடித்தார். இந்த படத்தை எடுத்து பாலு மகேந்திரா இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக அது ஒரு கனாக்காலம் படத்தில் நடித்தார்.

இதனையடுத்து அமீர் இயக்கத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு பிரியாமணி பருத்திவீரன் படத்தில் நடித்தார். இந்த படத்தில் பிரியாமணி கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ஹிட் ஆனது. இந்த படத்திற்காக பிரியாமணிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

பின்னர் விஷாலுக்கு ஜோடியாக மலைக்கோட்டை படத்தில் நடித்து ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படம் மூலம் பாலிவுட்டில் பிரியாமணி அறிமுகம் ஆனார். ஹிந்தியில் ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் பிரியாமணி நடித்தார்.

சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் திரைக்கு வந்த ஜவான் படத்தில் பிரியாமணி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரியாமணி ஸ்லீவ்லெஸ் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

