சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேலூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் ப்ரீ கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 1500 மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். கடந்த வருடம் இந்த பள்ளியில் பிளஸ் டூ படித்து முடித்து தேர்ச்சி பெற்று மேற்படிப்புக்காக கல்லூரியில் படித்து வரும் 17 வயது மாணவி ஒருவருக்கு தொடர்ந்த இரண்டு நம்பர்களிலிருந்து ஆபாச மெசேஜ் வந்துள்ளது.
மாணவி பயின்ற பள்ளியில் தற்போது ஆசிரியர்களாக பணியாற்றி வரும் அப்பகுதியை சேர்ந்த ஜெகதீசன் (36), தினகரன் (41) ஆகிய இருவரும் பள்ளியில் இருந்த மாணவியின் செல்போன் என்னை எடுத்து தொடர்ந்து whatsapp மூலமாக மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி வந்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் மாணவியை இரவு நேரங்களில் வீடியோ கால் செய்யக்கோரி மிரட்டியுள்ளனர். இதனை வெளியே சொன்னால் பிரச்சனை வந்துவிடும் என்று பயந்த மாணவி இது தொடர்பாக யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
ஆனால் தொடர்ந்து ஆசிரியர்கள் இரவு நேரங்களில் வீடியோ கால் செய்யச் சொல்லி டார்ச்சர் செய்ததால் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களின் தொல்லை தாங்காமல் மாணவி இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தினகரன் மற்றும் ஜெகதீசனை கைது செய்துள்ளனர். இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…