சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான விஜயன் (42), இரண்டு நாட்களுக்கு முன்பு திருத்தணி பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். இன்று காலை, விஜயன் தங்கியிருந்த அறையிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியதால், விடுதி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் மாற்றுச் சாவியைப் பயன்படுத்தி அறையைத் திறந்து பார்த்தபோது, விஜயன் படுக்கையில் சுயநினைவின்றி கிடந்தார். தகவலறிந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரைப் பரிசோதித்து, அவர் ஏற்கனவே உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
இதையடுத்து அறையில் சோதனை நடத்திய திருத்தணி போலீசார், படுக்கை அருகே அதிக அளவில் மாத்திரைகள் சிதறிக் கிடப்பதைக் கண்டனர். மேலும், விஜயன் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றையும் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், “கடன் தொல்லையால் எனது வாழ்க்கை சீரழிந்து விட்டது.
இதன் காரணமாகவே மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்துகொள்கிறேன். குடும்பத்தினர் தன்னை மன்னித்துவிட வேண்டும்” என்று உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2001-ல் ரூ.50 லட்சம் கடனில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், இன்று ரூ.500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். இது மக்களின் பணம்…
புதிய தொழிலில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு…
சின்னத்திரை நடிகை மன்யா ஆனந்த், நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் தன்னை ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக தொடர்புகொண்டு, ஒப்பந்தம் செய்ய…
வெற்றிகரமான படங்களைத் தந்த இயக்குநர் மு.களஞ்சியம் நடிகர் கார்த்திக் தனது திரைப்படத்தில் நடித்தபோது கொடுத்த தொல்லைகள் குறித்துப் பேட்டி ஒன்றில்…
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில், இரண்டு குழந்தைகள் ஒரு பாம்புடன் ஒரு…
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம் அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…