தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முடச்சிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அய்யாத்துரை (65). இவர் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்வதற்காகப் புதிய புகைப்படம் எடுப்பதற்காக, தனது மகள் கௌசல்யாவுடன் (26) மோட்டார் சைக்கிளில் பேராவூரணிக்குச் சென்றுள்ளார். நாட்டாணிக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, சேதுபாவாசத்திரம் நோக்கிச் சென்ற மினிபஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்தக் கோர விபத்தில் அய்யாத்துரை மற்றும் அவரது மகள் கௌசல்யா இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு உடனடியாகப் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், வழியிலேயே அய்யாத்துரை பரிதாபமாக உயிரிழந்தார். மகள் கௌசல்யா தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். வாக்காளர் அடையாள அட்டை திருத்தத்திற்காகப் புறப்பட்ட தந்தை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்தக் கிராமம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில், உடல்நலம் குன்றிய கணவரை விட்டுவிட்டு, 50 வயது பெண் ஒருவர் தனது சொந்த…
பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…
துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…