என்னது ஆடு ஜீவிதம் படத்துக்கு பிரித்திவிராஜ் சம்பளமே வாங்கலையா..? அதற்கு பதிலாக அவர் செய்த விஷயம்..!!

By Priya Ram

Published on:

பிருத்திவிராஜ் நடித்த ஆடு ஜீவிதம் படம் கடந்த 2008-ஆம் ஆண்டு அதிகம் விற்பனையான மலையாள நாவலான ஆடு ஜீவீதத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. இந்த படத்தை இயக்குனர் பிளஸ்சி இயக்கியுள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு வரை பட்ஜெட் காரணமாக படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை.

   

இதனால் பிருத்திவிராஜ் சம்பளம் வாங்காமல் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் வெற்றி அடைந்தால் பிருத்திவிராஜ் அதில் தனக்கான பங்கை எடுத்துக் கொள்வார். இப்போது எல்லாம் ஹீரோக்கள் பட்ஜெட் காரணமாக சில படங்களில் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுக்கின்றனர். ஆனால் அந்த படம் வெற்றி அடைந்தால் எதிர்பார்த்ததை விட ஹீரோக்களுக்கு சம்பளம் டபுளாக கிடைக்கும். அதே முறையில் தான் பிருத்திவிராஜ் சம்பளம் வாங்காமல் ஆடு ஜீவிதம் படத்தை நடித்து முடித்துள்ளார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. ஆனால் கொரோனா நோய் தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் படக்குழுவினர் ஜோர்டானிய பாலைவனத்தில் 70 நாட்கள் என்ன செய்வது என்று அறியாமல் தவித்தனர். வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக மத்திய அரசு மேற்கொண்ட வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூலம் படக்குழுவினர் வீடு வந்து சேர்ந்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது.

நேற்று முன்தினம் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. நஜீப் என்ற புலம்பெயர்ந்த தொழிலாளியின் நிஜ வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆடு ஜீவிதம் படத்தை பார்த்தவுடன் இயக்குனர் மணிரத்தினம், நடிகர் கமலஹாசன் உள்ளிட்டார் பாராட்டி வருகின்றனர். மஞ்சு மெல்பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் அதிக வரவேற்பை பெற்றது. அதேபோல ஆடு ஜீவிதம் படமும் வசூலை அதிகளவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Priya Ram