அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி…! தமிழ்நாட்டில் டீ, காபி, வடையின் விலை அதிரடி உயர்வு..!!

By Soundarya on பங்குனி 11, 2026

Spread the love

தமிழ்நாடு முழுவதும் நிலவி வரும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உணவுப் பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, டீ, காபி, வடை, பஜ்ஜி போன்ற அன்றாட சிற்றுண்டிகளின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எரிபொருள் தட்டுப்பாட்டால் சமையல் செலவு அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த விலை உயர்வு நேரடியாகப் பிரதிபலித்துள்ளது. அங்கு இதுவரை 8 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த வடை, பஜ்ஜி மற்றும் போண்டா ஆகியவற்றின் விலை தற்போது 2 ரூபாய் உயர்த்தப்பட்டு, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு சாமானிய மக்களின் அன்றாடப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.