முகேஷ் அம்பானியின் மருமகள் கொண்டு வந்த குட்டி ஹேண்ட் பேக்…. அதுக்கு இவ்வளவு விலையா…? ரொம்பவே ஓவர் தான்…!!

By Devi Ramu on புரட்டாதி 25, 2025

Spread the love

முகேஷ் அம்பானி உலகின் பணக்காரர்கள் பட்டியலில் 18-ஆவது இடத்தில் உள்ளார். இவர் தனது மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்டிற்கும் கடந்த ஆண்டு திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவானது. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஒரு புதிய வெப் தொடரை இயக்கியுள்ளார்.

அதன் பிரீமியர் நிகழ்ச்சிநிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, ஆனந்த் அம்பானி, ஸ்லோகா மெஹ்டா, ராதிகா மெர்சண்டு ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது  ராதிகா அணிந்திருந்த சிகப்பு நிற ஆடை இந்திய மதிப்பில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 100 ரூபாய் என கூறப்பட்டது.

   

இந்த நிலையில் ராதிகா வைத்திருந்த சிறிய கைப்பை பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. Her Hermes Kelly 20 Two-Way handbag என்ற பிராண்டை சேர்ந்த அந்த ஹேண்ட்பேக்கின் விலை 45 முதல் 60 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இதனை அறிந்த நெட்டிசன்கள் ஒரு சிறிய பை இவ்வளவு விலையா என ஆச்சரியத்தில் உள்ளனர்.