“வயிற்றில் துணியை கட்டிக்கொண்டு கர்ப்பிணி நாடகம்…” அரசு மருத்துவமனையில் சிக்கிய பெண்…! விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

By Devi Ramu on புரட்டாதி 21, 2026

Spread the love

தஞ்சாவூர் அரசு ராஜா மிராசுதார் மகப்பேறு மருத்துவமனையின் பிரசவ வார்டில், கடந்த 20-ம் தேதி இரவு சந்தேகத்திற்குரிய முறையில் பெண் ஒருவர் உலா வந்துள்ளார். அவரைக் கண்டு சந்தேகமடைந்த நோயாளிகளின் உறவினர்கள் பிடித்துச் சோதனையிட்டபோது, அவர் வயிற்றில் துணியைக் கட்டிக்கொண்டு கர்ப்பிணி போல் நாடகமாடியது அம்பலமானது.

குழந்தையைத் திருடவே அவர் வந்துள்ளார் எனச் சந்தேகித்த உறவினர்கள், அப்பெண்ணையும் அவருடன் வந்த இருவரையும் பிடித்துப் பாதுகாப்பாளர்களிடம் ஒப்படைத்தனர். மேலும், மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

   

தகவலறிந்து வந்த போலிஸார் நடத்திய விசாரணையில், அப்பெண் மயிலாடுதுறையைச் சேர்ந்த ஆர்த்தி என்பதும், திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் கணவர் குடும்பத்தினரை ஏமாற்றுவதற்காக இவ்வாறு வயிற்றில் துணியைக் கட்டிக்கொண்டு நடமாடியதும் தெரியவந்தது. இருப்பினும், குழந்தையைக் கடத்தும் நோக்கம் உள்ளதா என்ற கோணத்தில் போலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.