அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில மாதங்களாக நீடித்து வந்த தீவிர ராணுவ மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒரு நிரந்தர போர் நிறுத்த உடன்படிக்கைக்கான வரைவு தற்போது தயாராகியுள்ளது. சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர, 14 முக்கிய அம்சங்கள் (14 Points) அடங்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா முன்வைத்துள்ளது. இந்த புதிய அமைதி உடன்படிக்கையின் மிக முக்கியமான கொள்கை வரைவுகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக ஊடகப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தின் முதல் 3 முக்கிய நிபந்தனைகள் ஈரானின் அணுசக்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பை மையமாகக் கொண்டுள்ளன. முதலாவதாக, ஈரான் தங்களிடம் ஒருபோதும் அணு ஆயுதமோ அல்லது அணுகுண்டோ இல்லை என்பதை சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் ஒப்புக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக, உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தின் மிக முக்கிய பாதையான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz), எவ்வித சுங்கக் கட்டணமும் இன்றி இருவழிப் போக்குவரத்துக்கும் உடனடியாக முழுமையாகத் திறந்துவிடப்பட வேண்டும். மூன்றாவதாக, கடல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அனைத்து அண்டர்வாட்டர் கண்ணிவெடிகளையும் (Water Mines) ஈரான் 30 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்; ஏற்கனவே அமெரிக்காவின் அதிநவீன மைன் ஸ்வீப்பர் கப்பல்கள் பல கண்ணிவெடிகளை அழித்துள்ள நிலையில், எஞ்சியவற்றையும் ஈரானே நீக்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட அம்சங்கள் ஈரானின் மீதான பொருளாதார மற்றும் ராணுவ முற்றுகையைக் தளர்த்துவது குறித்து பேசுகின்றன. கடந்த சில மாதங்களாக ஈரானியத் துறைமுகங்களைச் சுற்றி வளைத்திருந்த அமெரிக்கக் கடற்படையின் வரலாறு காணாத முற்றுகை இனி தளர்த்தப்படும் என்றும், இதனால் அங்குச் சிக்கியிருந்த பிற நாடுகளின் வணிகக் கப்பல்கள் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்பலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம், கடந்த 11 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் பவர்புல் B2 பாம்பர் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலால், ஈரானின் நிலத்தடி மலைப் பகுதிகளுக்குள் புதைந்துபோன அணுசக்திப் பொருட்கள் சர்வதேச அணுசக்தி முகமையுடன் (IAEA) இணைந்து அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் முழுமையாக அழிக்கப்படும். அதேசமயம், அடுத்த அறிவிப்பு வரும் வரை ஈரானுக்கு எவ்விதப் பணப் பரிவர்த்தனையோ அல்லது நிதி விடுவிப்போ செய்யப்படாது என்பதும் இதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலும், அதற்குப் பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் சப்ளையை கடுமையாகப் பாதித்தது. இதன் எதிரொலியாக இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றிலும் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்தது. இத்தகைய உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இந்த 14 அம்ச ஒப்பந்தத்தில் டிரம்ப் இறுதி கையெழுத்திடுவாரா என்கிற கேள்வி உலக அரங்கில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பு பேச்சுவார்த்தையாளர்கள் இந்த தற்காலிக கட்டமைப்பை ஏற்றுக்கொண்டு அடுத்தகட்ட விவாதங்களை நோக்கி நகர்ந்தாலும், இறுதி உடன்படிக்கை எட்டப்பட்டு இப்பகுதியில் நிரந்தர அமைதி திரும்புமா என்பது டிரம்ப் எடுக்கப்போகும் இறுதி முடிவிலேயே அடங்கியுள்ளது.
கேரேஜை நோக்கிச் செல்லும் ஒரு சாதாரண அன்றாடப் பயணம், ஒரு நொடியில் மிகக் கொடூரமான "கனவாக" மாறும் என்று 25…
ஹரியானா மாநிலம் பரீதாபாத் பகுதியில் ஆன்லைன் தளம் மூலம் ஆர்டர் செய்த பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு, டெலிவரி ஊழியரால் நேர்ந்த…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற பி.எட். நுழைவுத் தேர்வு மையத்திற்கு வெளியே, சாக்கடைக் கால்வாயின் கான்கிரீட் மூடி உடைந்ததில்…
தற்போது சமூக ஊடகங்களில் ஒரு குடும்பத்தினர் இரவு உணவு சாப்பிடும் போது எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.…
"அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்து, தற்கொலை செய்துகொண்ட அக்காட்சி நிர்வாகி மகேந்திரனின் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மேற்கொள்ளும் கள ஆய்வு நிகழ்வுகளை, சமூக ஊடகங்களில்…